News April 1, 2024
சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகவில்லை.
Similar News
News January 11, 2026
அவருக்கு பதில் இவர்.. BCCI அறிவிப்பு

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் இருந்து விலகிய ரிஷப் பண்டுக்கு பதிலாக மாற்று வீரரை BCCI அறிவித்துள்ளது. முதல் ODI இன்று நடைபெறவுள்ள நிலையில், பயிற்சியின்போது பண்டின் விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
News January 11, 2026
விஜய்க்கு எல்லா ஏற்பாடுகளும் ரெடி: டெல்லி போலீஸ்

டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் என காவல்துறை அறிவித்துள்ளது. கரூரில் தனது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் CBI <<18824937>>அலுவலகத்தில், விஜய் நாளை ஆஜராக<<>> உள்ளார். இதனிடையே, டெல்லி விமான நிலையம், அவர் தங்கும் ஹோட்டல், CBI அலுவலகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெக கடிதம் எழுதியிருந்தது. அதற்கு டெல்லி காவல்துறை பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
News January 11, 2026
TNPSC தேர்வர்களே இது உங்களுக்குதான்..!

TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக TN அரசு இலவச பயிற்சி அளிக்கவுள்ளது. நாளை முதல் ஜன.16 வரை கல்வித் தொலைக்காட்சியில் காலை 7 – 9 மணி வரை பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும். இது மாலை 7 – 9 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும். TN Career Service Employment என்ற யூடியூப் சேனலிலும் இதனை காணலாம். மேலும், <


