News March 18, 2025
BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News March 19, 2025
வீடு வீடாக ரேஷன் விநியோகம் குறித்து ஆய்வு: சக்கரபாணி

வீடு வீடாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளதுபோல், தமிழகத்திலும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
News March 19, 2025
CSK மேட்ச் பார்க்க 2.50 லட்சம் பேர் வெயிட்டிங்!

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் வாங்க 2.50 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும். எனவே, முன்பதிவு செய்ய காத்திருக்கும் அத்தனை பேருக்கும் டிக்கெட் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஒருவரால் 2 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய முடியும்.
News March 19, 2025
கோடையில் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறீர்களா?

கோடைகாலத்தில் ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பது உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மெதுவாக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். மேலும், தலைவலி, உடல் சோர்வு, சளி, தொண்டைப் புண், பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் அலெர்ட் கொடுக்கின்றனர். மண் பானை நீரைப் பருகுவது சிறந்தது எனவும் அறிவுறுத்துகின்றனர்.