News March 18, 2025
6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 23 வரை, TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 21 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 6, 2025
தேர்தல் வியூகம் தயார்! மாநாட்டு தேதியை அறிவித்த பாஜக

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது. காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இந்த மாநாடு உதவும் என பாஜக நம்புகிறது.
News July 6, 2025
ரஜினி & அஜித்துடன் நடிக்க ஆசை: ஷிவம் துபே

தனக்கு ரஜினிகாந்த் & அஜித்குமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என ஷிவம் துபே கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பட விழாவில் பேசிய அவர், மேற்கூறிய நடிகர்களுடன் நடிக்க ஆசை என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இது இரு நடிகர்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. முன்பு, சூர்யாவை ஃபேவரைட் ஹீரோவாக தல தோனி & சின்ன தல இருவரும் கூறியிருந்தனர்.
News July 6, 2025
பட்டாசு ஆலை விபத்து.. CM ஸ்டாலின் நிவாரணம்

விருதுநகர் வெற்றிலையூரணி கிராமத்தில் <<16962592>>பட்டாசு ஆலை வெடி விபத்தில்<<>> பால குருசாமி என்பவர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ₹4 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.