News March 18, 2025
போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, PM மோடி உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிரம்ப்-புதின் ஆகியோரது இன்றைய சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Similar News
News September 22, 2025
BREAKING: அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர், போட்டோ உள்ளிட்ட விவரங்களை EMIS தளத்தில் பதிவிட வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் விவரங்களை அக்.6 முதல் 23-ம் தேதிக்குள் HM-கள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அனுப்புவதற்கு ஏற்ப பெற்றோர்களின் செல்போன் எண்ணை பதிவேற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SHARE IT.
News September 22, 2025
மா வந்தே: PM மோடி படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

PM மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘மா வந்தே’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும், உண்மை சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
ஆபரேஷன் சிந்தூர் 2.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

மொரோக்கோ சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆபரேஷன் சிந்தூர் பாகம் 2, 3 எல்லாம் பாகிஸ்தானின் நடவடிக்கையை பொறுத்தே அமையும் எனத் தெரிவித்தார். மேலும், அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.