News March 18, 2025
புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் – புதுச்சேரி எம்பி

பாராளுமன்றத்தில் பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு என்று தனியாக வந்தே பாரத் ரயில் இல்லை. எனவே புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் பேரளம் ரயில்வே பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
Similar News
News March 18, 2025
புதுவை: மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு. மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் இன்று 18-3-25 இரவு 8 மணியளவில் கடந்த 2 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.. இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவு நிற்கின்றன.
News March 18, 2025
புதுவை சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவ்வாறு ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற தேவையான மருந்துகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார மையத்தினை அணுகி சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
News March 18, 2025
புதுச்சேரி: பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் – முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்து வருகின்றன. புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம்.தமிழ் நமது உணர்வு. நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், என உத்தரவிட்டார்.