News March 18, 2025

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

image

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 18, 2025

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை

image

மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

இபிஎஸ்ஸூடன் மீண்டும் இணக்கமா?

image

இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக MLAக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் வாய்ப்பு கேட்டார்.

News March 18, 2025

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க முயற்சி: சோனியா

image

100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க BJP அரசு முயற்சி செய்து வருவதாக காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், ஒரு நாள் ஊதியத்தை ₹400ஆக உயர்த்த வேண்டும் எனவும், வேலை நாட்களை 100லிருந்து, 150ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!