News March 18, 2025

இந்த வார ‘ரெட்ரோ’ காமிக்ஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு

image

சூர்யாவை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
‘ரெட்ரோ’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படம், வரும் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை காமிக்ஸ் வடிவில் படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, 6வது வாரமாக படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி உள்ளது. காமிக்ஸ் சுவாரஸ்யமாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்பு எகிறியுள்ளது.

Similar News

News September 7, 2025

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

image

*மன துன்பங்களுக்கு ஒரே மருந்து உடல் வலி.
*மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை.
*எல்லா செல்வங்களுக்கும் மூலமாய் இருப்பது உழைப்பு.
*கயிற்றை நமக்கு விற்றவன்தான் நாம் தூக்கிலிடும் கடைசி முதலாளியாக இருப்பான்.
*பயனுள்ள பொருட்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது பயனற்ற நபர்களை அதிகளவில் உருவாக்குகிறது. *ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.

News September 7, 2025

உலகக்கோப்பை: மாஸ் என்ட்ரி கொடுத்த மொராக்கோ

image

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, முதல் ஆப்பிரிக்க நாட்டு அணியாக மொராக்கோ கால்பந்து அணி தேர்வாகியுள்ளது. நைஜருக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடருக்குள் நுழைந்துள்ளது. PSG நட்சத்திர வீரர் ஹகிமி இடம்பெற்றுள்ள இந்த அணியானது, 29, 38, 51, 69, 84-வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.

News September 7, 2025

₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

image

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

error: Content is protected !!