News March 18, 2025

VIDEO: கூலி படத்தின் சூப்பர் அப்டேட்

image

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னை, ஹைதராபாத், பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

Similar News

News July 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜூலை 8 – ஆனி 24 ▶ கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶ எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.

News July 8, 2025

நாளைக்கு வேகமாக சுற்றப் போகும் பூமி: ஏன் தெரியுமா?

image

நாம் வாழும் பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் தன்னைத்தானே சுற்றிச் சுழல்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை 9, ஜூலை 22, ஆகஸ்ட் 5 ஆகிய 3 நாள்களிலும் சற்று அதிகமான வேகத்தில் பூமி சுற்றப் போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நாளில் 1.51 மில்லி செகண்ட் குறையுமாம். பூமியின் வேகத்துக்கு காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. எனினும், இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியின் புதிய கட்சிக்கு எதிராக வழக்கு?

image

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடங்கிய புதிய கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார். தவெக கொடியில் யானை சின்னம் இருப்பதாக பகுஜன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங் மனைவி தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் பதில் அளித்தது.

error: Content is protected !!