News March 18, 2025
உலகமே எதிர்பார்க்கும் சந்திப்பு..!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் நாளை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 3 ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேசப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக் கூடாது என்ற உறுதி மட்டுமே போர்நிறுத்தத்தை சாத்தியப்படுத்தும் என ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
Similar News
News March 18, 2025
சென்செக்ஸ் ஒரே நாளில் 1,131 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,131 புள்ளிகள் இன்று ஒரே நாளில் உயர்வடைந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22,834ஆக வர்த்தகமானது.
News March 18, 2025
இன்றைய முக்கிய செய்திகள்

*மிகப் பெரிய விழாவை நடத்திக் காட்டியிருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்.
*ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை பெற விவசாயிகள் அடையாள அட்டை பெற மார்ச் 31 கடைசி நாள்.
*நாளை அதிகாலை 3.30க்கு பூமியில் கால்பதிக்கிறார் சுனிதா.
*டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
*உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப்- புடின் இன்று பேச்சுவார்த்தை.
News March 18, 2025
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஷிண்டே

முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அவுரங்கபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.