News March 18, 2025
உடலுறவு காட்சிகள்.. மனம் திறந்த நடிகை கரீனா கபூர்

பிரபல இந்தி நடிகையும், நடிகர் சயீப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர், படங்களில் வரும் உடலுறவு காட்சிகள் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பொதுவாக உடலுறவு காட்சிகள், படத்தின் கதையை முன்னோக்கி கொண்டு செல்லாது என்பது தனது கருத்து என்று கூறியுள்ளார். ஆதலால் அத்தகைய காட்சிகள் தேவையில்லை என தான் கருதுவதாகவும், எனவே தாம் அக்காட்சிகளில் நடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
திட்டமிட்டே கலவரத்தில் ஈடுபட்டனர்: பாஜக

நாக்பூர் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்துக்களின் வீடுகள், கடைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பின்மை போன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே, ‘சாவா’ படத்தை புகழ்ந்தும், அவுரங்கசீப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தும், கலவரத்திற்கு மூல காரணமாக பாஜக செயல்பட்டதாக காங். சாடியுள்ளது.
News March 18, 2025
பிரபல பாடலாசிரியர் கோபாலகிருஷ்ணன் மறைவு

பிரபல மலையாள பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் (78) காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு கொச்சி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மலையாளத்தில் 200 படங்களில் 700க்கும் மேற்பட்ட பாடல்களையும், பல படங்களுக்கு திரைக்கதை, வசனங்களையும் அவர் எழுதியுள்ளார். பாகுபலி, ஆர்ஆர்ஆர், அனிமல் உள்ளிட்ட படங்களுக்கு மலையாளத்தில் அவர் பாடல்கள், வசனங்களை எழுதியுள்ளார்.
News March 18, 2025
ஒரு கட்டிங்குக்கு ₹1 லட்சமாம்… ரொம்ப காஸ்ட்லியாக இருக்கே!

மும்பையைச் சேர்ந்த பிரபல சிகை அலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் காட்டில் மழைதான். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் இவர்தான் ஹேர் ஸ்டைலிஸ்ட். ஒருவருக்கு ஹேர்கட் செய்ய, ஆலிம் ரூ.1 லட்சம் பில் போடுகிறாராம். ஆலிமின் தந்தையும் சிகை அலங்கார நிபுணராக இருந்தவர்தான். அமிதாப், தீலிப் குமார் போன்ற ஹீரோக்களுக்கு அவர் ஹேர் ஸ்டைலிஸ்டாக இருந்துள்ளார்.