News March 17, 2025
பெண் முன்பு ஆபாசம்: நாடு எங்கே போகிறது?

மே.வங்கத்தில் ரயில் நிலையத்தில் இளம்பெண் முன், இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேகம்பூர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பக்க பிளாட்பாரத்தில் நின்ற இளைஞர் ஒருவர், திடீரென யாரையும் பொருட்படுத்தாமல் இந்த அருவருப்பான செயலை செய்தார். இம்மாதிரி நபர்கள் இருந்தால், நாட்டில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?
Similar News
News July 7, 2025
பெண்களும் கற்றாழையும்

*கர்ப்ப காலம், பிரசவ காலத்துக்கு பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கக் கற்றாழை ஜெல்லை தடவலாம். *நீர்க்கடுப்பு, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், உடல்சூடு போன்றவற்றையும் சோற்றுக்கற்றாழை குணப்படுத்தும். *கற்றாழை மடலை கீறி, அதில் வடியும் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
News July 7, 2025
50 ஆபாச வீடியோக்கள்… சிக்கிய இந்து அமைப்பு நிர்வாகி

கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா சம்பவத்தை போல் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்து அமைப்பு நிர்வாகி சமித் ராஜூவின் செல்போனில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
News July 7, 2025
மீண்டும் மோதிக்கொள்ளும் அன்புமணி – ராமதாஸ்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் நாளை பாமக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நாளை செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதற்கு போட்டியாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் மீண்டும் வலுப்பெறுகிறது. மறுபுறம் நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.