News April 1, 2024
கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (2)

1) இந்திரா காந்தி அரசில் இருந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலருக்கு தெரியும் முன்பே, கச்சத்தீவு ஒப்படைப்பு ஒப்பந்தம் குறித்து கருணாநிதிக்கு தெரியும். 2) எதிர்க்கட்சிகளுக்கு தெரியுமா என வெளியுறவு செயலரிடம் கருணாநிதி கேட்டார். அதற்கு தமிழகத்தின் கருத்தை அறிந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசலாம் என இந்திரா காந்தி நினைப்பதாக வெளியுறவு செயலர் பதிலளித்தார்.
Similar News
News December 31, 2025
டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபி ஆகவும், பால நாகதேவி குற்றப்பிரிவு டிஜிபி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ் தயாள் பொறுப்பேற்கவுள்ளார்.
News December 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
News December 31, 2025
சாதனை படைத்த இந்திய மகளிர்

SL மகளிருக்கு எதிரான 5-வது டி20-ல் 68 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை(POM) ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். இதன்மூலம் டி20-ல் அதிக முறை POM வென்ற IND வீராங்கனை மிதாலி ராஜின்(12) சாதனையை அவர் சமன் செய்தார். 241 ரன்கள் குவித்த ஷபாலி வர்மாவும், அதிக முறை தொடர்நாயகி விருது வென்ற IND வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்துள்ளார். அனைவரும் 4 முறை POS வென்றுள்ளனர்.


