News March 17, 2025
விழுப்புரத்தில் பணி நியமன ஆணை வழங்கல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி -IV தேர்வில் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.03.2025) வழங்கினார்.
Similar News
News March 18, 2025
விழுப்புரத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

விழுப்புரத்தை சேர்ந்த காத்தமுத்து தனது தந்தை இறப்புச் சான்று பெறுவது தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்காக நகராட்சி ஊழியர் மதன் பத்தாயிரம் லஞ்சம் கேட்ட போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்களின் அறிவுரைப்படி இன்று(மார்.18) பாண்டியன் நகரில் உள்ள மதனுடைய இல்லத்தில் காத்தமுத்துவை வரவழைத்து பத்தாயிரம் லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
News March 18, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க…

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக, குழந்தைகளுக்கு(6 மாதம் முதல் 6 வயது வரை) விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள், மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு, விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – மார்ச் 22 வரை நடைபெறுகிறது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
News March 18, 2025
மாற்றுத்திறனாளி மகனை காய்கறி பெட்டியில் தூக்கி வந்த பெற்றோர்

விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கேடேசன். இவரது மகன் கோவிந்தராஜ்(26), பிறவியிலேயே கை, கால் செயலிழந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்டது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர் நேற்று, கோவிந்தராஜை, காய்கறி பெட்டியில் வைத்து மொபட்டில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறை கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.