News April 1, 2024
அருணாச்சல் விவகாரத்தில் சீனா மீண்டும் அத்துமீறல்

அருணாச்சல் பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிதாக பெயரிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலில் 2017இல் 6 இடங்களுக்கும், 2021இல் 15 இடங்களுக்கும், 2023இல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது. இந்நிலையில் தற்போது 12 மலைகள், 4 நதிகள், ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட மேலும் 30 இடங்களுக்கு சீன சிவில் விவகார அமைச்சகம் பெயரிட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
100 கோடி இந்தியர்களின் கைகளில் ‘இணையம்’

இந்தியாவின் Broadband சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025, நவம்பர் மாதத்தில் 100 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்று 100 கோடியாக வளர்ந்துள்ளது. இதில், ஜியோ 51 கோடி பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 2-வது இடத்திலும் (31.42 கோடி), VI 3-வது இடத்திலும் (12.77 கோடி பேர்), BSNL 4-வது இடத்திலும் (2.94 கோடி பேர்) உள்ளது.
News January 1, 2026
மக்களை ஆளக்கூடிய திறன் கொண்டவர் EPS: செல்லூர் ராஜு

TN-ல் சினிமா கவர்ச்சி எப்போதும் உண்டு என்பதால் விஜய்க்கு கூட்டம் கூடுவது சகஜம்தான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அமிதாப் பச்சன் வந்தால் கூடத்தான் கூட்டம் கூடும் என்ற அவர், விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் மேட்டர் இல்லை, யார் நம்மை ஆளப்போகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும், மக்களை ஆளக்கூடிய நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதை EPS நிரூபித்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
ரூ.3,000 அறிவித்தார் முதல்வர்.. யார் யாருக்கு கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு <<18730960>>பொங்கல் போனஸ் <<>>அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, C&D பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ₹3,000 என்ற உச்சவரம்பிற்கு மிகை ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும், தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024 – 25-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் (அ) அதற்கு மேலாக பணிபுரிந்த முழு, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ₹1,000 சிறப்பு மிகை ஊதியம்(போனஸ்) வழங்கப்படவுள்ளது.


