News March 17, 2025
ஈரோட்டில் வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு சீல் வைப்பு

ஈரோட்டில் வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான 31 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 203 கடைகளில் ரூ.2கோடியே 23 லட்சம் அளவுக்கு வாடகை நிலுவை உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 31 கடைகளுக்கு மாநகராட்சியின் ஆணையாளர் உத்தரவின் பேரில் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Similar News
News August 17, 2025
ஈரோடு: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தால் வேலை!

ஈரோடு: பவானிசாகர் மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், நீச்சல் மற்றும் மீன்பிடி வலை தொடர்பான திறன்கள் அவசியம். மேலும் விவரங்களுக்கு,பவானியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் அல்லது 04295-299261 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News August 17, 2025
ஈரோடு: இரண்டு சிறுவர்கள் கைது

ஈரோடு, சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசியனூர் பகுதியில், ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து, 250 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பிரபல கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை செய்த போது, போதை மாத்திரை இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக 2 சிறுவர்களை பிடித்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.
News August 16, 2025
ஈரோடு: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், பொதுமக்கள் புகார் அளிக்க, 0424-2220101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.