News March 17, 2025
பிளஸ் 2 போதும்: APP டெவலப்பர் ஆகலாம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 7, 2025
புதுகை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 7, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு!

புதுகை மாவட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
புதுகை: 150 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு!

பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 150 கிலோ புகையிலை பொருட்களை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று தேனூர்- தேனி கண்மாய் அருகே பொன் னமராவதி தாசில்தார் சாந்தா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


