News April 1, 2024
₹500, ₹1000.. பணத்தில் ஜொலிக்கும் தமிழகம்

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அவர்களுக்கு ₹1000 வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 14, 2026
TCS-ல் பணி நீக்கம் தொடர்கிறது!

AI-ன் தாக்கத்தால் கடந்த 6 மாதங்களில் 30,000 பேரை TCS நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் தங்களது நிறுவனத்தில் மறுசீரமைப்பு திட்டம் முடியவில்லை என்றும், தேவைப்பட்டால் 2026-லும் பணி நீக்கம் தொடரும் எனவும் TCS தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டின் முடிவிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செப். காலாண்டில் 19,755 பேரையும், டிச. காலாண்டில் 11,151 பேரையும் TCS பணிநீக்கம் செய்திருந்தது.
News January 14, 2026
ஈரானியர்களே போராட்டத்தை கைவிட வேண்டாம்: டிரம்ப்

தொடர்ந்து போராடி நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுமாறு ஈரானியர்களுக்கு US அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவி தயாராக இருக்கிறது எனவும், மக்களை கொல்வதை நிறுத்தும் வரை ஈரானிய அதிகாரிகளை சந்திக்கவே மாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் வெடித்துள்ள போராட்டத்தால் இதுவரை சுமார் 2,000 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 14, 2026
விஜய்க்கு ஆதரவாக ராகுல் பேசியது ஏன்? காங்கிரஸ் பதில்!

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுலின் ட்விட்டுக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். பாஜக சென்சார் போர்டை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது என்றும், நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு ஒடுக்கி வருவதற்கு எதிராக தான் ராகுல் குரல் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் 1960-ல் நடந்ததை பற்றி இப்போது பேசுவது தேவையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


