News March 17, 2025

IPLஐ இனி இலவசமாக பார்க்க முடியாது

image

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் காலம் தொடங்கியதில் இருந்து IPL கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக கண்டு களித்து வந்த ரசிகர்கள், இனி அதனை கட்டணமின்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், குறைந்தபட்சமாக ஜியோ பயனர்களுக்கு ₹299 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில், 90 நாள்கள் ஹாட்ஸ்டார் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News March 18, 2025

உடலுறவு காட்சிகள்.. மனம் திறந்த நடிகை கரீனா கபூர்

image

பிரபல இந்தி நடிகையும், நடிகர் சயீப் அலிகானின் மனைவியுமான கரீனா கபூர், படங்களில் வரும் உடலுறவு காட்சிகள் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். பொதுவாக உடலுறவு காட்சிகள், படத்தின் கதையை முன்னோக்கி கொண்டு செல்லாது என்பது தனது கருத்து என்று கூறியுள்ளார். ஆதலால் அத்தகைய காட்சிகள் தேவையில்லை என தான் கருதுவதாகவும், எனவே தாம் அக்காட்சிகளில் நடிப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

அண்ணாமலை மீது வழக்கு பதிவு

image

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 107 பாஜகவினரை இரவு 7 மணிக்கு தடுப்புக் காவலில் இருந்து விடுவித்த போலீசார், அவர்கள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 17, 2025

பெண் முன்பு ஆபாசம்: நாடு எங்கே போகிறது?

image

மே.வங்கத்தில் ரயில் நிலையத்தில் இளம்பெண் முன், இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேகம்பூர் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பக்க பிளாட்பாரத்தில் நின்ற இளைஞர் ஒருவர், திடீரென யாரையும் பொருட்படுத்தாமல் இந்த அருவருப்பான செயலை செய்தார். இம்மாதிரி நபர்கள் இருந்தால், நாட்டில் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?

error: Content is protected !!