News March 17, 2025
Loan Appகளை டவுன்லோடு செய்யாதீங்க

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், போலி Loan Appகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பணம் தேவைப்படும் மக்களை குறிவைத்து, மிகக்குறைந்த வட்டி, விரைவான ஒப்புதல் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடிக் கும்பல்கள் வலை விரிக்கின்றன. இதை நம்பி, Loan Appகளை பதிவிறக்கம் செய்யும்போது, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, மோசடி அரங்கேற்றப்படுவதாக எச்சரித்துள்ளனர்.
Similar News
News March 17, 2025
‘MBA டிகிரியின் காலகட்டம் முடிந்துவிட்டது’

எம்பிஏ குறித்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் CHRO சீமா ரகுநாத் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி அளித்துள்ளது. திறமையும், சிந்திக்கும் ஆற்றலும் இல்லாத எம்பிஏ பட்டதாரிகளே தற்போது நிரம்பியுள்ளனர். எம்பிஏ டிகிரியை புறந்தள்ளிவிட்டு, உண்மையான அறிவையும், திறமையையும் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அடிப்படை ஐக்யூ கூட இல்லாமல் இருக்கும் எம்பிஏ பட்டம், இனி டாய்லெட் பேப்பருக்கு சமம் என அவர் கூறியுள்ளார்.
News March 17, 2025
PAK கிரிக்கெட்டுக்கு இரண்டு பக்கமும் அடி

CT தொடரை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ₹869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. தொடரை நடத்திய பாக்., அணி ஒரு போட்டியை மட்டுமே அங்கு விளையாடியது. ஒரு போட்டி துபாயிலும், ஒரு போட்டி மழையாலும் ரத்தாக, அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பெரும் வருவாய் இழப்பை சந்தித்த அந்த கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு இனி 5 Star ஹோட்டல் கிடையாது, சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
News March 17, 2025
காயங்களை நாய் நக்கினாலும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம்

மனிதர்களின் காயங்களை நாய் நக்கினாலும் ஏஆர்வி ரேபிஸ் தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடாத நபர், ராணிப்பேட்டையில் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பில், காயங்களில் நாய் நக்கினாலும், நாயின் உமிழ்நீர் மனிதர்கள் மீது பட்டாலும் விஷம்தான். இதற்கும் ஏஆர்வி தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.