News March 17, 2025
அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: EPS

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News July 6, 2025
சூர்யா 46 பக்கா.. வெங்கி அட்லூரி உறுதி

தான் சூர்யாவிடம் 3 கதைகளைக் கூறியதாகவும், அதில் ஒன்று அவருக்கு பிடித்துப் போக, அதிலே அவர் நடித்து வருவதாகவும் ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகர் நான் என்றும் பெருமைப்பட கூறியுள்ளார். சூர்யாவின் 46-வது படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த காம்போ எப்படி இருக்கும்?
News July 6, 2025
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ ₹35

தக்காளி விலை மீண்டும் குறைந்துள்ளது. வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹15 குறைந்து ₹35-க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியிலும், நகரவாசிகள் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். தற்போது மீண்டும் சரிவைக் கண்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News July 6, 2025
2026-ல் திமுகவுக்கு இருக்கும் சாதகம்

2026 தேர்தலில் மும்முனை தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், 10 மாதங்களுக்கு முன்னரே திமுக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளது. பாஜக எதிர்ப்பை முன்னிலைப்படுத்தியும், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் & புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறியும் வாக்கு சேகரிக்கின்றனர். இது திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.