News March 17, 2025
ஆடு, கோழி, சேவல் விலை உயர்ந்தது

தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனித் திருவிழா தொடங்க உள்ளதால், கோழி, சேவல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள், கிராம மக்கள் ஆடு, கோழி, சேவலை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், 1kg எடைகொண்ட சேவல் ₹350க்கு விற்ற நிலையில், தற்போது ₹450 – ₹500 வரையும், 1kg எடைகொண்ட நாட்டுக்கோழி விலை ₹450 இல் இருந்து ₹1500 வரையும் விற்பனையாகிறது. ஆடு (ஒன்றுக்கு) ₹3000 வரை உயர்ந்துள்ளது.
Similar News
News March 18, 2025
இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 18, 2025
மிஸ்ட் கால் மூலம் PF இருப்புத் தொகை அறியும் வசதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (PF) இருப்புத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை வீட்டில் இருந்தே எளிதில் அறிய முடியும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஆரம்பிக்கும்போது அளித்த செல்போன் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், PF இருப்புத் தொகை குறித்து எஸ்எம்எஸ் உடனே வரும். அதை கொண்டு இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
News March 18, 2025
வீட்டில் குழந்தைகள் இருக்கா? அப்போது இது முக்கியம்..

கேரளாவில் 3 வயது சிறுமி டூத் பேஸ்டுக்கு பதில் எலி பேஸ்டை பயன்படுத்தி <<15791111>>உயிரிழந்தாள்<<>>. அதுபோல் பிளீச்சிங் தூள், சோப்பு தூள் போன்றவையும் கூட குழந்தைகளுக்கு எமனாக மாறலாம் என்பதால் அதை குழந்தைகளின் கைக்கு எட்டாத இடங்களில் வைப்பது அவசியம். அதேபோல் கத்தி, கத்தரிக்கோல், சிறிய நட்டுகள், பட்டன்கள், சில்லரை காயின்கள் போன்றவையும் அவர்களின் பார்வைக்கு படும்படி வைக்கக்கூடாது. Share it…