News April 1, 2024

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 12, 2025

மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

image

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?

News August 12, 2025

சைபர் கிரிமினல்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

image

சைபர் கிரிமினல்களின் SIM கார்டுகளை உடனே முடக்க SP-களுக்கு அதிகாரமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சந்தேகத்துக்கு உரியவர்களின் லொக்கேஷன்கள், வங்கி & தொலைபேசி விவரங்களை உடனடியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், முதல்கட்டமாக தெலங்கானாவில் அமல்படுத்தப்படவுள்ளது.

News August 12, 2025

ராசி பலன்கள் (12.08.2025)

image

➤ மேஷம் – நலம் ➤ ரிஷபம் – லாபம் ➤ மிதுனம் – பொறுமை ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – ஆதரவு ➤ துலாம் – சாந்தம் ➤ விருச்சிகம் – கவனம் ➤ தனுசு – உதவி ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – நற்செயல்.

error: Content is protected !!