News March 17, 2025
காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை

இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்தவர் பூஜா (21) வேலூரில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்பகுதியை சார்ந்த சரண்ராஜ் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். தகவலறிந்த பெற்றோர்கள் சென்று முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி தாலியை அகற்றினர். இதில் மனம் உடைந்த பூஜா மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், திருவள்ளூரில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 29, 2025
திருவள்ளூர் பெண், பெண் வீட்டார் கவனத்திற்கு

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்-9498147528, கும்மிடிபூண்டி-9498147510, பொன்னேரி-9498146658, , ஊத்தூக்கோட்டை-9498147775, திருத்தணி- 9498147530. *உங்கள் வீட்டு&தெரிந்த பெண்களுக்கு பகிர்ந்து சேவ் பண்ண சொல்லவும். கண்டிப்பாக உதவவும்.*