News March 17, 2025
கள்ளக்குறிச்சி: மரக்கிளை முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதி(48). இவர் கடந்த 6ம் தேதி சேலம் செல்ல ஏமப்பேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 20, 2025
உளுந்தூர்பேட்டையில் விமான ட்ரோன் பூங்கா

உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடு பாதையில் விமான பரிசோதனைக் கூடம், விமானப் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசிடம் நிலத்தை வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் இன்று(மார்.19) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
News March 19, 2025
கள்ளக்குறிச்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் தகவல்.
News March 19, 2025
8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <