News March 17, 2025
மம்தாவுக்கு நேரம் பார்த்து பதிலடி கொடுத்த யோகி!

கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மரண கும்பமேளா என மே.வங்க CM மம்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில், பர்கானாஸில் ஹோலியின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலியானதை சுட்டிக்காட்டியுள்ள உ.பி CM யோகி ஆதித்யநாத், சிறிய தொந்தரவுகளை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், மகாகும்பமேளாவை விமர்சிக்கின்றனர் என்றார். நடந்தது மரண கும்பமேளா இல்லை; மரணத்தை வென்ற கும்பமேளா என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 24, 2025
சூடுபிடித்துள்ள கார் விற்பனை

GST வரி குறைப்பால் 1500CC-க்கும் குறைவான கார்களின் விலை ஒரு லட்சம் வரை குறைந்துள்ளது. இதனால் கார் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வரி குறைப்பு அமலான 22-ம் தேதி மட்டும் டாடா மோட்டர்ஸ் 10,000 கார்களையும், மாருதி சுசுகி 30,000 கார்களையும், ஹுண்டாய் 11,000 விற்று தள்ளியுள்ளது. அதேபோல் கார்களை வாங்க விசாரிப்பவர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
News September 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 468
▶குறள்: ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
▶பொருள்: எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.
News September 24, 2025
பெண் ஜனாதிபதிகளிடம் விருது பெற்றது பெருமை: ஊர்வசி

‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இது ஊர்வசி வாங்கும் 2-வது தேசிய விருது. 2 தேசிய விருதுகளையும் பெண் ஜனாதிபதிகளிடம் பெற்றது பெருமையாக நினைக்கிறேன் என விருதை பெற்ற பின் ஊர்வசி தெரிவித்துள்ளார். பிரதீபா பாட்டீல் மற்றும் திரவுபதி முர்மு ஆகியோர் கைகளால் விருதுகளை ஊர்வசி வாங்கியுள்ளார்.