News March 17, 2025
பக்தர் பலி: டிடிவி கண்டனம்

திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயர சம்பவம் நிகழ, இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்க முறையாகத் திட்டமிட வேண்டும் என திமுக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
Similar News
News September 24, 2025
இந்தியாவை எந்த அணியாலும் வெல்ல முடியும்: BAN கோச்

இந்திய அணியை வெற்றி கொள்ளும் திறன் அனைத்து அணிகளுக்கும் உள்ளதாக வங்கதேச பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். போட்டி அன்று களத்தில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணியே வெல்லும் எனவும், கடந்த கால நிகழ்வுகள் வெற்றியை தீர்மானிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வங்கதேசத்தின் பந்துவீச்சு திறன் தற்போது வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
இதுதான் சமூகநீதியா? EPS

மதுரை, செக்கானூரணியில் உள்ள ஐடிஐ விடுதியில் மாணவர் ராகிங் செய்யப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்குவதை நியாயப்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், ’சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது; விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி இருக்க வேண்டும் என TN அரசை சாடியுள்ளார்.
News September 24, 2025
நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டாரா? CLARITY

நடிகர் பார்த்திபன் உயிரிழந்ததாக யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மற்றவர்களின் மனதை பிணமாக்கி, அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இப்படி செய்பவர்கள், அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.