News April 1, 2024
பறக்கும் படையினர் பணம் பறிமுதல்

அரக்கோணம் அடுத்த பள்ளூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அலுவலர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் கல்லூரி மாணவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68,400 கொண்டு சென்றது தெரிந்தது. பறக்கும் படையினர் அந்த பணத்தை அரக்கோணம் வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- இரத்னகிரி முருகன் கோயில் போங்க

இராணிப்பேட்டை ரத்தினகிரி மலையில் உள்ள பாலமுருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News April 13, 2025
ராணிப்பேட்டை காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் செயலியை பதிவிறக்கம் செய்து பண மோசடிக்கு உள்ளாகாதீர்கள் எனவும் அங்கீகரிக்கப்படாத டிரேடிங் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு, இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று குறுஞ்செய்தியில் வரும் லிங்கை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News April 13, 2025
ஐடிஐ முடித்திருந்தால் போதும் ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <