News March 17, 2025
மார்ச் 17: வரலாற்றில் இன்று

*1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் பேரரசன் ஆனான்.
*1861 – இத்தாலி இராஜ்ஜியம் உருவானது.
*1958 – ஐக்கிய அமெரிக்கா, வங்கார்ட் 1 என்ற செயற்கைக்கோளை ஏவியது.
*1996 – உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Similar News
News September 24, 2025
இனி சாக்லேட் பாய் கேரக்டர் வேண்டாம்: சாந்தனு

விஜய் சேதுபதி, SK, மணிகண்டன் போன்று சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள தொடங்கி இருப்பதாக சாந்தனு தெரிவித்துள்ளார். சாக்லேட் பாய் கதாபாத்திரம் வேண்டாம் என்பதில் தீர்க்கமாக இருப்பதால், சாமானிய மக்களுக்கு தன்னை பிடிக்கும் நோக்கில் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறேன் என்றார். மேலும், தான் இனி சாந்தனு பாக்கியராஜ் இல்லை; வெறும் சாந்தனு மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.
News September 24, 2025
RECIPE: சுவையான கம்பு புட்டு!

➥கம்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும் ➥இதை ஆறவைத்து, மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும் ➥அதில் ½ டம்ளர் வெந்நீரை ஊற்றி உதிரி உதிரியாக பிசையவும் ➥இந்த கம்பு மாவை 10 நிமிடம் மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும் ➥வேகவைத்த மாவில், கருப்பட்டி வெல்லம், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் சேர்த்தால், சுவையான கம்பு புட்டு ரெடி. இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.
News September 24, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ₹40 குறைந்து ₹10,600-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹84,800-க்கும் விற்கப்படுகிறது. கடந்த 2 நாளாக காலை, மாலை என இருமுறை விலை உயர்ந்த நிலையில், இன்று மாலை விலை குறையுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.