News March 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: தீவினையச்சம்
▶குறள் எண்: 209
▶குறள்: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
▶பொருள்: தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
Similar News
News September 24, 2025
அக்.6-ல் ஜே.பி.நட்டா தமிழகம் வருகை

BJP தலைவர் ஜே.பி.நட்டா, அக்.6-ம் தேதி தமிழகம் வருகிறார். 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துவது, NDA கூட்டணியில் கட்சிகளை இணைப்பது தொடர்பாக பாஜக தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதிமுக மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நயினார் நாகேந்திரனின் மக்கள் சந்திப்பு பயணத்தை அவர் தொடங்கிவைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 24, 2025
காப்பி அடித்த ARR? கோர்ட் கொடுத்த ஆசுவாசம்

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் வரும் ‘வீரா ராஜ வீர’ பாடலில் காப்புரிமையை மீறியதாக, சமீபத்தில் ARR-க்கு ₹2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ARR மேல்முறையீடு செய்த நிலையில், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனது தந்தையின் ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாக கொண்டே ‘வீரா ராஜ வீர’ பாடல் அமைக்கப்பட்டதாக வசிஃபுதின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
விஜய்யின் உருவ பொம்மையை எரிப்பேன்: வீரலட்சுமி

பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால், அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்பு கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.