News March 17, 2025
நிம்மதி பெருமூச்சு விடும் டெல்லி: காற்றின் தரம் உயர்வு!

டெல்லியில் காற்று மாசு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது. காற்றின் தரக்குறியீடு 600-க்கு மேல் சென்றதால் மக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில், 3 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்றின் தரம் உயர்ந்துள்ளது. காற்றின் தரக்குறியீடு 85 என்ற அளவிற்கு நேற்று பதிவாகியுள்ளது. அண்மையில் மழை பெய்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. காற்றின் தரக்குறியீடு 51 – 100 என்ற அளவிற்குள் இருந்தால் திருப்திகரமானது என பொருள்படும்.
Similar News
News July 6, 2025
TVK டீமில் இருந்து PK விலகியது ஏன்? வெளியான காரணம்

விஜய்யின் கூட்டணி அறிவிப்பில் உடன்பாடில்லை என்பதாலேயே <<16952357>>பிரசாந்த் கிஷோர்<<>>(PK) தவெக தேர்தல் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி அமைத்து போட்டியிட PK விரும்பியதாகவும், அப்படி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் நவ. மாதத்திற்கு பிறகு மீண்டும் TVK உடன் இணைய உள்ளாராம்.
News July 6, 2025
விஜயின் ஒழுக்கம் டோலிவுட்டில் இல்லை: தில் ராஜு

தனது பணிக்காக 6 மாதங்களை ஒதுக்கும் விஜய், மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்வதாக ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இதனை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் தயாரிப்பாளருக்கு நன்மை பயக்கும் என்ற அவர், தெலுங்கு சினிமாவில் இந்த அமைப்பு சரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் & விஜய்யின் டைமிங் பஞ்சுவலை பலரும் பாராட்டியுள்ளனர்.
News July 6, 2025
ஆசிரியர்களை வதைக்கும் திமுக அரசு : நயினார்

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை திமுக அரசு வதைப்பதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். ஒருபுறம் ஆசிரியர்கள் இன்றி, பல அரசு பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித்துறை முடங்கியுள்ளது. கல்வி துறையின் மீது அக்கறை இருந்தால், உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.