News March 17, 2025
IPL முதல் நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்…!

ஐபிஎல் தொடக்க நாளில் போட்டி மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகளும் களைகட்டும். அந்த வகையில், மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து, பாடகர் அரிஜித் சிங்கின் கச்சேரியும் நடக்க இருக்கிறது. இதனால், ஐபிஎல் தொடக்க நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
Similar News
News July 6, 2025
பிற்பகல் 12 மணி வரை முக்கிய செய்திகள்!

★<<16962233>>பாஜகவுடன் <<>>கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு குறையலாம் என Ex MP அன்வர் ராஜா பேச்சு. ★<<16962592>>சாத்தூரில் <<>>ஒரே வாரத்தில் 2-வது வெடிவிபத்து ★<<16960828>>பிரிக்ஸ் <<>>உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரேசில் சென்றடைந்தார் PM மோடி. ★டிரம்புக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கிய <<16960233>>எலான் <<>>மஸ்க். ★இந்திய பெண்கள் <<16962725>>கால்பந்து<<>> அணி வரலாற்று சாதனை.
News July 6, 2025
TVK டீமில் இருந்து PK விலகியது ஏன்? வெளியான காரணம்

விஜய்யின் கூட்டணி அறிவிப்பில் உடன்பாடில்லை என்பதாலேயே <<16952357>>பிரசாந்த் கிஷோர்<<>>(PK) தவெக தேர்தல் ஆலோசனைக் குழுவிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக – தவெக கூட்டணி அமைத்து போட்டியிட PK விரும்பியதாகவும், அப்படி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் நவ. மாதத்திற்கு பிறகு மீண்டும் TVK உடன் இணைய உள்ளாராம்.
News July 6, 2025
விஜயின் ஒழுக்கம் டோலிவுட்டில் இல்லை: தில் ராஜு

தனது பணிக்காக 6 மாதங்களை ஒதுக்கும் விஜய், மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்வதாக ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இதனை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் தயாரிப்பாளருக்கு நன்மை பயக்கும் என்ற அவர், தெலுங்கு சினிமாவில் இந்த அமைப்பு சரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் & விஜய்யின் டைமிங் பஞ்சுவலை பலரும் பாராட்டியுள்ளனர்.