News March 16, 2025

ரூ.350 நோட்டு வெளியீடா?

image

ரூ.200 தாள் நிறம் போல ரூ.350 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக படங்களுடன் சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என பிரபல செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அதில் அந்த செய்தி பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.350 நோட்டு தொடர்பாக வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News July 5, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு

image

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு z + பாதுகாப்பை வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது z + பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

News July 5, 2025

148 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்..

image

IND vs ENG மேட்சில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. ENG-ன் பிரைடன் கார்ஸின் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறியது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது டக் அவுட்டாகும். 1877-ல் ENG-க்கு எதிராக ஆஸி.யின் நெட் கிரிகோரி தான் முதன்முதலில் டக் அவுட்டாகி இருந்தார். 148 வருடங்கள், 3 மாதங்கள் & 20 நாள்கள் கழித்து 10,000-வது டக் அவுட் நிகழ்ந்துள்ளது.

News July 5, 2025

விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

image

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!