News April 1, 2024
திருவள்ளூர்: தேர்தல் பணிமனை திறப்பு

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Similar News
News August 15, 2025
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்து

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை, தனது சார்பாக, அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
News August 15, 2025
பூட்டிய குடோனில் வாலிபர் வெட்டி படுகொலை

மாதவரம், அம்பேத்கர் நகர், அருகே தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தின் இரும்பு குடோன் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே உள்ளது. இந்த கிடங்கில் இருந்து நேற்று காலை திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது மாதவரம், பர்மா காலனியை சேர்ந்த சந்துரு என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
News August 15, 2025
மின்சார ரெயில்கள் அட்டவணை மாற்றம்

திருவள்ளூர் சென்னை புறநகர் பகுதிகளில் தினமும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வழக்கமாக 40 சதவீத ரெயில்கள் குறைத்து இயக்கப்படும்.ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை செங்கல்பட்டு, சென்ட்ரல் அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி ஞாயிறு அட்டவணை படி இயங்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.