News March 16, 2025
ஏ.ஆர். ரகுமானை டைவர்ஸ் செய்யவில்லை: மனைவி

ஏ.ஆர். ரகுமானும், மனைவி சாய்ரா பானுவும் டைவர்ஸ் பெற்றதாக செய்திகள் முன்பு வெளியாகின. இந்நிலையில், உடல்நிலை பாதித்து ஹாஸ்பிடலில் ஏ.ஆர். ரகுமான் சேர்க்கப்பட்ட செய்திகள் இன்று வெளிவந்தது. அவர் உடல்நிலை குணமடைய வேண்டி அறிக்கை வெளியிட்ட சாய்ரா பானு, ‘2 பேரும் பிரிந்தே வாழ்கிறோம். அதிகாரப்பூர்வமாக டைவர்ஸ் பெறவில்லை. அதனால் என்னை முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்’ என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News July 5, 2025
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) காலமானார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்களை எழுதிய அவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். திமுகவின் பிரச்சார முழக்கமான ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம் என்ற கவிதையை நேற்று எழுதியபின் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
இன்று ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்டி

‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய வீரர்கள் உள்பட 12 பேர் இதில் கலந்துகொள்கின்றனர். ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், கென்யாவின் ஜூலியஸ் யெகோ உள்ளிட்ட முக்கிய தடகள வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டி, இந்திய தடகள சங்கம் & உலக தடகள சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறுகிறது.
News July 5, 2025
திமுகவின் A டீம் விஜய்: அர்ஜுன் சம்பத்

திமுகவின் A டீம் தான் ஜோசப் விஜய் என்று அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளக்கூடாது என்பதற்காக, கிறிஸ்தவ மிஷனரி எல்லாம் சேர்ந்து கொண்டு வரப்பட்ட கட்சி தான் தவெக; விஜய்யை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் எனக் கூறிய அவர், திராவிட கட்சிகளுக்கு எதிராக கட்சி தொடங்கிய கமல், எப்படி ஒரு சீட்டுக்காக திமுக உடன் இணைந்தாரோ, விஜய்யும் அதேபோல் இணைவார் என்று விமர்சித்துள்ளார்.