News March 16, 2025

இங்கிலாந்து டெஸ்டுக்கும் ரோஹித்தே கேப்டன்?

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மாவே கேப்டன் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆஸி. தொடரில் மோசமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு அவர் ஆளானார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. விரைவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவர் கேப்டனா, இல்லையா என கேள்வியெழுந்தது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ வட்டாரங்கள், கேப்டன்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறின.

Similar News

News March 17, 2025

நானும் COOL மனநிலையை இழந்திருக்கிறேன்: தோனி

image

கேப்டன் COOL என பெயர் வாங்கிய தோனி, ஒருமுறை அந்த மனநிலையை இழந்துவிட்டதாக மனம் திறந்திருக்கிறார். 2019ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்திற்குள் சென்று நோ பாலுக்காக வாதிட்டது, தான் செய்த மிகப் பெரிய தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். கூலான மனநிலையை எப்போதாவது இழந்ததுண்டா என்ற கேள்விக்கு தோனி இந்த பதிலை அளித்துள்ளார். பெரிய வீரர் என்றாலும், அவரும் மனிதர் தானே!

News March 17, 2025

நலமுடன் பிரார்த்தனை செய்யும் போப் பிரான்சிஸ்

image

போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்யும் புதிய போட்டோவை வாடிகன் மாளிகை வெளியிட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, ஜெமில்லி ஹாஸ்பிடலில், சக பாதிரியார்களுடன் திருப்பலியில் ஈடுபட்ட போப், தான் நலமுடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

News March 17, 2025

மம்தாவுக்கு நேரம் பார்த்து பதிலடி கொடுத்த யோகி!

image

கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மரண கும்பமேளா என மே.வங்க CM மம்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில், பர்கானாஸில் ஹோலியின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலியானதை சுட்டிக்காட்டியுள்ள உ.பி CM யோகி ஆதித்யநாத், சிறிய தொந்தரவுகளை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், மகாகும்பமேளாவை விமர்சிக்கின்றனர் என்றார். நடந்தது மரண கும்பமேளா இல்லை; மரணத்தை வென்ற கும்பமேளா என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!