News March 16, 2025
சென்னைவாசிகள் கவனத்திற்கு..! ஆட்டோ கால் டாக்ஸி ஓடாது!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 17, 2025
சிஎஸ்கே போட்டிக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

இந்தியாவில் 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில், மார்ச் 23ல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் எனவும், போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
தீ பிடித்து எரிந்த மின்சார பைக்; மூவர் படுகாயம்

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த நடராஜன் தனது மின்சார பைக்கை சார்ஜ் போட்டுவிட்டு மாடிக்கு சென்று படுத்துள்ளார்.கீழ்தளத்தில் அவரின் மகன் கெளதம்,மருமகள் மஞ்சு, 9 மாத குழந்தை மூவரும் உறங்கி உள்ளனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீ பிடித்து எரிந்து கீழ்தளம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News March 17, 2025
இரட்டை கொலை; இரத்த குளமாக மாறிய கோட்டூர்புரம்

சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.