News March 16, 2025

‘பைத்தியக்காரத்தனம்’… தோனி பற்றி பேசிய கோலி!

image

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக செயல்பட்டது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஃபீல்டிங் செட்டப் உள்ளிட்ட ஆட்ட வியூகங்களை பகிர்ந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என தோனி ரியாக்‌ஷன் கொடுப்பார் என்று அவர் ஜாலியாக கூறியுள்ளார். தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார்.

Similar News

News July 5, 2025

வாட்டர் பெல்: பெற்றோர் முக்கிய வேண்டுகோள்

image

‘வாட்டர் பெல்’ எனும் திட்டம் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நீர் பருகுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஸ்டீல் (அ) செம்பு பாட்டில்களைக் கொண்டுவர அரசு பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம், தமிழை வளர்க்கும் தமிழக அரசு ‘தண்ணீர் மணி’ என்று திட்டத்தின் பெயரை மாற்ற பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

News July 5, 2025

மதுரை எய்ம்ஸில் ஒரு கட்டடம் ஜனவரியில் செயலாக்கம்

image

2026 ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் ஒரு கட்டடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற ஜனவரிக்குள் லேப், ஹாஸ்டல் & 150 நோயாளி படுக்கைகள் கட்டமைக்கப்படும் என்றார். 2027-க்​குள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

News July 5, 2025

இன்று நிலநடுக்கம், சுனாமி பீதியில் ஜப்பான் மக்கள்!

image

புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ரியோ தாட்சுகியின் கணிப்பால் ஜப்பான் மக்கள் இன்று பீதியில் ஆழ்ந்துள்ளனர். 2025 ஜூலை 5-ம் தேதி ஜப்பானில் சுனாமி வரும் என 2021-ம் ஆண்டிலேயே அவர் கணித்திருந்தார். இதனிடையே, ஜப்பானின் டொகாரா தீவில் கடந்த வாரம் 900 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாட்சுவின் கணிப்பு நடக்குமோ என அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பான் அரசு இதனை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!