News March 16, 2025

ரூ.14,000 உதவித்தொகையுடன் ITI தொழில் பழகுநர் பயிற்சி

image

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI தொழில் பழகுநர் பயிற்சி (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electrician, Auto Electrician, Fitter, Turner, Painter & Welder) மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் அளிக்கப்படுகிறது. பயிற்சியை பெறுவதற்கு, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி காலை 10 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 16, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

சென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள்: 1.மெரினா கடற்கரை, 2.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 3.வள்ளுவர்கோட்டம், 4.ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில், 5.எலியட்ஸ் கடற்கரை, 6.விஜிபி கோல்டன் பீச், 7.செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, 8.ஆயிரம் விளக்கு மசூதி, 9.கபாலீஸ்வரர் கோவில், 10.வடபழனி முருகன் கோவில். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2025

கடன் தொல்லை நீக்கும் திருவுடைநாதர்

image

வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில் உள்ளது. பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் தொல்லையால் அவதிப்படுவோர், திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் சிறந்து விளங்க இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2025

சென்னைவாசிகள் கவனத்திற்கு..! ஆட்டோ கால் டாக்ஸி ஓடாது!

image

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!