News March 16, 2025
டெங்குவால் பள்ளி மாணவி மரணம்

வேலூரில் பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மாணவி சிவானி (13) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 17, 2025
இந்தியா வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர்

5 நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இந்த 5 நாள் பயணத்தின்போது, ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 17, 2025
வெற்று பட்ஜெட்டை மறைக்க வீடியோ ஷூட்: இபிஎஸ்

வெற்று பட்ஜெட்டை மறைக்க, CM வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் ரூ சின்னம் பொறிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்து CM ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். இதனை விமர்சித்த இபிஎஸ், உலகத்திலேயே தனது கட்சியின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே, மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.