News March 16, 2025
செங்கோட்டையனை புகழ்ந்த ஓபிஎஸ் மகன்

கொங்கு நாட்டின் தங்கம் செங்கோட்டையன் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பாராட்டியுள்ளார். செங்கோட்டையனுடைய மனசாட்சி உணர்வு தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்றும், தனது அரசியல் வழிகாட்டிகளில் அவரும் ஒருவர் எனவும் ஜெயபிரதீப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 17, 2025
பாஜக போராட்டத்திற்கு திருமா ஆதரவு

டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை வரவேற்பதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை வலியுறுத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்ட அவர், மதுபானம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் கொள்கை, அதற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம் என்றும் கூறியுள்ளார்.
News March 17, 2025
செந்தில் பாலாஜி உத்தமரா? அண்ணாமலை தாக்கு

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை டாஸ்மாக் ஊழல் பணத்தை வைத்து திமுக நடத்த திட்டமிட்டுள்ளதாக, <<15788153>>அண்ணாமலை <<>>குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி என்ன உத்தமரா?, காந்தியவாதி போல் திமுகவினர் வேடமிடுகின்றனர் என்று விமர்சித்த அவர், தலை முதல் கால் வரை ஊழல் ஆட்சி நடைபெறும் அமைச்சரவையில் உள்ளவர்தான் செந்தில் பாலாஜி என்றும் சாடியுள்ளார்.
News March 17, 2025
மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், அப்பாவு மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர், அப்பாவு அவையை விட்டு வெளியேறினார். தற்போது, மீண்டும் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவர், “தவறு செய்திருந்தால் நானே திருத்தியிருப்பேன். அல்லது முதல்வரால் திருத்தப்பட்டிருப்பேன்” என்று பேசினார்.