News March 16, 2025

கோவையில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

image

கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, கோவையின் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில், வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 16, 2025

கருவலூர் மாரியம்மன் கோயில்!

image

கோவை அன்னூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.

News March 16, 2025

உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

image

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன்  கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.

News March 16, 2025

கோவை: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!