News March 16, 2025
INDIA கூட்டணியில் விரிசலா? பிரகாஷ் காரத் பதில்

INDIA கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அணி என CPM மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள சில கட்சிகள் டெல்லி, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலத்தில் நேர் எதிராக அரசியல் செய்வதாகவும், அதனால் அவர்களின் நிலைபாடு மாநில தேர்தல்களில் மாறுவதாகவும் தெரிவித்தார். தேசிய அளவில் பாஜகவை ஒன்றிணைந்து எதிர்ப்பது மட்டுமே தங்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2025
CISFஇல் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள 1,161 கான்ஸ்டபிள் நிலையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் சமையலர், பெயிண்டர், டெய்லர் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்படுவர். இந்த வேலைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் இணையதளமான <
News March 16, 2025
உத்தரகாண்ட் நிதியமைச்சர் ராஜினாமா

உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் பட்ஜெட் தாக்கலின்போது, உத்தரகாண்ட் ஒன்றும் மலைப்பகுதி மக்களுக்கானதல்ல என அவர் பேசியிருந்தார். இதையடுத்து உத்தரகாண்ட் பாஜக அரசு, மலைப்பகுதி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால் சர்ச்சை உருவான நிலையில், பதவியை பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார்.
News March 16, 2025
ராணா பிரதாப் சிங்கின் வாரிசு காலமானார்

புகழ்பெற்ற ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றல், அரவிந்த் சிங் மேவார்(81). நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இன்று அவர் காலமானார். ரஞ்சி கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார். இவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். பரம்பரை சொத்துகளுக்காக மேவார் குடும்பத்தில் சட்டப் போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.