News March 16, 2025
உயிருக்கு போராடும் தமிழ் நடிகர்.. உதவிய உதயநிதி

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடுகிறார் பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி. தான் ஒரு நாள் உயிர் வாழ வேண்டுமானாலும் கூட இரு பாட்டில் ரத்தத்தை ஏற்ற வேண்டும் என்பதால் தனக்கு உதவி செய்யக்கோரி அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து ₹5 லட்சம் வழங்க துணை முதல்வர் உதயநிதி உத்தரவின்பேரில், அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2025
உத்தரகாண்ட் நிதியமைச்சர் ராஜினாமா

உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் பட்ஜெட் தாக்கலின்போது, உத்தரகாண்ட் ஒன்றும் மலைப்பகுதி மக்களுக்கானதல்ல என அவர் பேசியிருந்தார். இதையடுத்து உத்தரகாண்ட் பாஜக அரசு, மலைப்பகுதி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனால் சர்ச்சை உருவான நிலையில், பதவியை பிரேம்சந்த் அகர்வால் ராஜினாமா செய்துள்ளார்.
News March 16, 2025
ராணா பிரதாப் சிங்கின் வாரிசு காலமானார்

புகழ்பெற்ற ராஜபுத்திர அரசரான மகாராணா பிரதாப் சிங்கின் வழித்தோன்றல், அரவிந்த் சிங் மேவார்(81). நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் இன்று அவர் காலமானார். ரஞ்சி கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார். இவரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும். பரம்பரை சொத்துகளுக்காக மேவார் குடும்பத்தில் சட்டப் போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
2002 குஜராத் கலவரம்… மனம் திறந்தார் மோடி

2002 குஜராத் கலவரம் குறித்து PM மோடி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 2002க்கு முன்பு 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடைபெற்று இருப்பதாகவும், ஆனால் 2002 கலவரம் மிகைப்படுத்தி பொய் பிரசாரம் செய்யப்பட்டது, நீதிமன்ற தீர்ப்பால் தன்மீதான களங்கம் நீங்கியது என்றும் கூறியுள்ளார். 2002க்கு பிறகு குஜராத்தில் கலவரம் நடக்கவில்லை, தமது நிர்வாகம் அமைதியை நிலை நிறுத்தியது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.