News April 1, 2024
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமல்

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்.1) புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச் சாவடிகளில், அவ்வப்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூர், தி.மலை, வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் இன்று முதல் ஒரு நாளில் திரும்பும் கட்டணம் ₹5 – ₹20 வரையும், மாதாந்திர பாஸ் கட்டணம் ₹100 – ₹400 வரை கட்டணம் உயர உள்ளது.
Similar News
News January 9, 2026
துணை முதல்வராவார் பிரேமலதா: சுதீஷ் ஆருடம்

பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். கடலூர் தேமுதிக மாநாட்டில் பேசிய அவர், விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் எனக் குறிப்பிட்டார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக பேசிய அவர், 10, 15 சீட்களுக்காக தேமுதிக இல்லை எனவும் கூறினார்.
News January 9, 2026
BREAKING: பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு வெளியானது

சென்சார் பிரச்னையால், விஜய்யின் ஜனநாயகன் வெளியாகாத நிலையில், பொங்கலுக்கு பல நட்சத்திரங்களின் படங்களை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ கார்த்தியின் ‘வா வாத்தியார்’, மோகன்.ஜி-யின் ‘திரௌபதி 2’, சசிகுமாரின் ‘Freedom’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 9, 2026
தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது: கிருஷ்ணசாமி

கடந்த காலங்களில் திமுக, அதிமுக என மாறிமாறி கூட்டணி வைத்த புதிய தமிழகம், தற்போதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருக்கிறது. இந்நிலையில், தவெகவில் இருந்து முக்கிய தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக அக்கட்சியின் கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவை பார்ப்பதாகவும், தங்களை யார் வெற்றி பெற வைப்பார்களோ, அவர்களுடன்தான் கூட்டணி வைப்போம் எனவும் கூறியுள்ளார்.


