News April 1, 2024

தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு உயர்வு

image

தமிழகத்தின் தினசரி மின்நுகா்வு 426.439 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் உச்சபட்ச மின் நுகா்வும் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததைத் தொடா்ந்து, ஏசி-க்களின் பயன்பாடு அதிகரித்தது. இதே நிலை தொடா்ந்து நீடித்தால், ஏப்ரல் மாதத்தில் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டும் என கூறப்படுகிறது.

Similar News

News August 12, 2025

வரும் IPL ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள்?

image

IPL மினி ஏலம் 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள் என சில கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி சஞ்சு சாம்சன், இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர், கேம்ரூன் க்ரீன் ஆகியோர் இந்தமுறை ஏலத்துக்கு வரவாய்ப்புள்ளதாகவும், இவர்கள் சுமார் 20 கோடிக்கு மேல் ஏலத்துக்கு போவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.

News August 12, 2025

தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களை அறிவித்த TNSTC

image

சுதந்திர தினம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 1,320 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூருக்கு 190 பஸ்களும், அதேபோல் 17-ம் தேதி சென்னைக்கு திரும்ப 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. <>TNSTC<<>>-ல் புக் பண்ணுங்க.

News August 12, 2025

மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

image

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?

error: Content is protected !!