News March 16, 2025
சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை, சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.473.77 கோடி வசூலிக்க வேண்டும். நேற்று வரை, ரூ.398.20 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.75.57 கோடி வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க மாநகராட்சியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் வரியை செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News March 16, 2025
கருவலூர் மாரியம்மன் கோயில்!

கோவை அன்னூரை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறாள். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். இக்கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.
News March 16, 2025
உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், வடை, உள்ளிட்ட திண்பண்டங்களை வாங்கி உண்ணும் போது, அதில் உள்ள எண்ணெயை காட்டிலும், தாளில் உள்ள மையால் பாதிப்பு அதிகம். விற்பனையாளர்கள் பிளேட், வாழை, தேக்கு இலைகளை பயன்படுத்தவும், பார்சல் கட்ட தாளின் மேல் இலை வைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவும், தாளும் நேரடி தொடர்பில் இருக்க கூடாது என்றார்.
News March 16, 2025
கோவையில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கோவை வானிலை துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் மார்ச் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை, கோவையின் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 19, 20, 21 ஆகிய தேதிகளில், வெப்பம் அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.