News April 1, 2024
பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்

சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில். பாலியல் வன்புணர்வாளர்கள் கமலாலயத்தில். மதவெறியர்கள் கமலாலயத்தில். குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில். ஊழல்வாதிகள் கமலாலயத்தில். மொத்தத்தில் பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
SK-வுடன் ஜோடி சேரும் மிருணாள் தாக்கூர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் விரைவில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது முடிவடைந்துவிட்டதாகவும், இதில் சிவகார்த்திக்கேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இப்படத்தில் மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
News August 12, 2025
வரும் IPL ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள்?

IPL மினி ஏலம் 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள் என சில கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி சஞ்சு சாம்சன், இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர், கேம்ரூன் க்ரீன் ஆகியோர் இந்தமுறை ஏலத்துக்கு வரவாய்ப்புள்ளதாகவும், இவர்கள் சுமார் 20 கோடிக்கு மேல் ஏலத்துக்கு போவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
News August 12, 2025
தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களை அறிவித்த TNSTC

சுதந்திர தினம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 1,320 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூருக்கு 190 பஸ்களும், அதேபோல் 17-ம் தேதி சென்னைக்கு திரும்ப 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. <