News March 16, 2025

தமிழ் மொழியை புகழ்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

image

தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Similar News

News March 16, 2025

பெ.ம.க. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

image

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் (பெ.ம.க.) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் நீக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.

News March 16, 2025

ரயிலில் விரும்பிய உணவை ஆர்டர் செய்யும் வசதி

image

ரயில் பயணத்தின்போது அதில் விற்கப்படும் உணவுகள் சிலருக்கு விருப்பமில்லாது போகலாம். அத்தகைய நபர்களுக்கு ரயில்வே சிறப்பு வசதி செய்து தந்துள்ளது. இதற்கு ரயில்வேயின் IRCTC இணையதளம் சென்று நாம் ஆர்டர் செய்யலாம். அதாவது <>இந்த<<>> இணையதளத்தில் விருப்பமான உணவை தேர்வு செய்து, நமது PNR எண்ணை உள்ளிட்டு ஆர்டர் செய்தால், நமது இருக்கைக்கே விருப்பமான உணவு தேடி வரும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News March 16, 2025

பூமி திரும்பிய பின் சுனிதா வில்லியம்ஸ்-க்கு சிக்கலா?

image

9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்ப உள்ளார். புவியீர்ப்பு விசை இல்லாமல் இருந்ததால், அவருக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுனிதாவின் கால்கள் பிறந்த குழந்தையின் கால் போன்று மென்மையாக மாறி இருக்கும் என்றும், அதனால் நடக்கும்போது வலி ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதயத் துடிப்பிலும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!