News March 16, 2025
தீராத நோயை தீர்க்கும் கஞ்சமலை சித்தேசுவரசாமி கோயில்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.”அமாவாசை கோயில்’ என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News July 9, 2025
சேலம்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008033>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.