News March 16, 2025
நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.3.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
News March 16, 2025
கல்வராயன்மலையில் 4700 கிலோ வெள்ளம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அருள், ராமசாமி ஆகிய இருவரும் 4700 கிலோ வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் வாரம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4700 வெள்ளம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.
News March 16, 2025
கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பி.எம்., இண்டர்ஷிப் திட்டம் மூலம் வழங்கப்படும் இண்டர்ஷிப் பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களை http://www.pminternship.mca.gov.in/ என்ற இணையமுகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.